உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !! உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !! விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !! சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !! வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !! வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !

Election Commission 24x7 helpline number - 1950

Saturday, October 1, 2011

சென்னை மேயர் தேர்தல்-திமுக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய கோரிய அதிமுக

அதிமுகவினரின் எதிர்ப்புக்கு இடையே சென்னை மேயர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியனின் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Saidai Duraisamy and M Subraman
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் சைதை துரைசாமி, திமுக சார்பில் மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் சார்பில் சைதை ரவி, பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக சார்பில் வேல்முருகன், மதிமுக சார்பில் மனோகரன், விடுதலை சிறுத்தை கூட்டணி சார்பில் அமீர்பாட்சா, பாஜக சார்பில் ராஜேந்திரகுமார் மற்றும் சுயேட்சைகள் உள்பட 64 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அதே போல சென்னையில் உள்ள 200 வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு 3,445 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று சென்னை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் முன்னிலையில் நடந்தது. மேயர் வேட்பாளருக்கான மனுக்கள் அந்தந்த கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டன.

அதே போல வார்டு கவுன்சிலர் பதவி வேட்பாளர்களுக்கான மனுக்கள் அந்தந்த பகுதி தேர்தல் அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டன.

மேயர் வேட்பாளருக்கான மனுக்கள் பரிசீலனை நடந்து கொண்டிருக்கும்போது அமைச்சர் செந்தமிழன், அதிமுக எம்.பி. மனோஜ் பாண்டியன், அதிமுக எம்.எல்.ஏக்கள் கலைராஜன், வெற்றிவேல் ஆகியோர் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம் ஒரு மனு கொடுத்தனர்.

கவுன்சிலராக இருக்கும் மா.சுப்ரமணியன் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யாமல் மேயர் தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். கவுன்சிலராக உள்ள ஒருவர் மேயராகப் போட்டியிட அரசு கெஜட்டில் தடை உள்ளது. எனவே திமுக மேயர் வேட்பாளர் மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் மேயர் வேட்பாளர் சைதை ரவி ஆகியோருடைய வேட்பு மனுவை ஏற்க கூடாது. அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தகவல் அறிந்த மா.சுப்பிரமணியன் தனது பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு மாநகராட்சிக்கு விரைந்தார்.

அரசு கெஜட்டின் இந்தப் பிரிவு, மேயர் பதவிக்கான இடைத்தேர்தலுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று மா.சுப்பிரமணியன் சட்டரீதியாக விளக்கம் தந்தார். இதையடுத்து சட்ட நிபுணர்களுடன் கமிஷனர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் மா.சுப்பிரமணியம் போட்டியிட எந்தத் தடையும் இல்லை என்று விளக்கம் தந்தனர்.

இதையடுத்து மா.சுப்பிரமணியன் தந்த விளக்கத்தை அதிமுகவினரிடம் எடுத்துச் சொன்ன கமிஷ்னர், இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால் கேள்வி எழுப்பலாம் என்றார். ஆனால், அவர்கள் அனைவரும் அமைதியாக இருக்கவே, இந்த விளக்கம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, மா.சுப்பிரமணியன், சைதை ரவியின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதையடுத்து திமுகவினர் நிம்மதியுடன் கிளம்பிச் சென்றனர். இந்தப் பிரச்சனை காரணமாக 1 மணி நேரம் சென்னை மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மெத்தத்தில் 38 பேரின் மனுக்கள் மேயர் தேர்தலுக்கு ஏற்கப்பட்டுள்ளன.

மதுரையில் 32 மனுக்கள் ஏற்பு:

மதுரை மேயர் பதவிக்குப் போட்டியிட தாக்கலான மனுக்கள் பரிசீலனையில் முக்கிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் உள்பட 32 மனுக்கள் ஏற்கப்பட்டன. 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

BIG ROCK

Related Posts Plugin for WordPress, Blogger...