உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !! உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !! விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !! சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !! வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !! வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !

Election Commission 24x7 helpline number - 1950

Wednesday, September 21, 2011

தேர்தல் கமிஷனர் அறிவிப்பு:தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி

அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல்
சென்னை: தமிழக உள்ளாட்சித்தேர்தல் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவுள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷனர் சோ. அய்யர் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செப்.22) துவங்குவதாக தெரிவித்தார். மேலும் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி வரும் 29ம் தேதி என்றும், வேட்பு மனுக்கள் பரிசீலனை 30ம் தேதி நடக்கும் என்றும், அக்டோபர் 3ம்தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி தேதி என்றும் தெரிவித்தார். வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதற்கட்ட தேர்தல் அனைத்து மாநகராட்சிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் மற்ற பகுதிகளுக்கும் நடக்கவுள்ளது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அக்டோபர் 25ம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பதவியேற்பர். தமிழக உள்ளாட்சித்தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, இந்த தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் மூலம் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசு அலுவலர்கள் மூலம் வீடுவீடாக வழங்கப்படவுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதையடுத்து, உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.

No comments:

Post a Comment

BIG ROCK

Related Posts Plugin for WordPress, Blogger...