உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !! உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !! விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !! சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !! வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !! வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !

Election Commission 24x7 helpline number - 1950

Monday, October 3, 2011

வேட்பாளர் செலவின பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவு நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகள் ஓட்டு போடுபவர்களுக்கு பொருட்கள் மற்றும் பணம் கொடுத்து ஓட்டு பெறுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் எவ்வளவு பணம் செலவு செய்யலாம் என கட்டுப்பாடு விதித்துள்ளது. அறிவிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக செலவு செய்தால் பதவி இழக்கும் நிலை ஏற்படும்.உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் என கட்டுபாடு விதித்துள்ளது.இதன்படி ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 3,750 ரூபாய் வரையும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு 15 ஆயிரம், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 37 ஆயிரத்து 500, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 75 ஆயிரம், பேரூராட்சி மற்றும் நகராட்சி 3ம் நிலை, தலைவர் பதவிக்கு 56 ஆயிரத்து 250, நகராட்சி தலைவர் முதல் நிலை மற்றும் 2ம் நிலை 1 லட்சத்து 12 ஆயிரத்து 500, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நகராட்சி தலைவர் பதவிக்கு 2 லட்சத்து 25 ஆயிரம், பேரூராட்சி மற்றும் 3ம் நிலை நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 11 ஆயிரத்து 250, நகராட்சி கவுன்சிலர் முதல் நிலை, 2ம் நிலை 22 ஆயிரத்து 500, நகராட்சி கவுன்சிலர் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலைக்கு 56 ஆயிரத்து 250 ரூபாய் வரையிலும் செலவு செய்யலாம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

BIG ROCK

Related Posts Plugin for WordPress, Blogger...