உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !! உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !! விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !! சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !! வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !! வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !

Election Commission 24x7 helpline number - 1950

Tuesday, September 27, 2011

தே.மு.தி.க.- மா.கம்யூ.,இணைந்து 3வது அணி

அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறிய மார்க்சிஸ்ட் கட்சி, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கிடையே சுமுகமாக முடிந்துள்ளதை அடுத்து தொகுதியும் பிரிக்கப்பட்டது. 3 வது அணியாக உருவெடுத்துள்ளது ஒரு நல்ல செய்தி என்றார் விஜயகாந்த். அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சு வார்த்தையை மார்க்சிஸ்ட் கட்சி துவக்கியது.சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துடன், தொகுதிகள் பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் நேற்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பாலகிருஷ்ணன், தங்கவேலு, நூர் முகம்மது ஆகியோரும் பங்கேற்றனர்.மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட வேண்டாம் என்றும், தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் போட்டியிடாது எனவும் பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் கூட்டணிக்கு அழைத்து வர வேண்டும்' என விஜயகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்தை மார்க்சிஸ்ட் கட்சியும் ஏற்றுக்கொண்டது. அதை தொடர்ந்து, நேற்று மாலை மீண்டும் தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.இந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து தே.மு.தி.க.,வுடன் தொகுதி பங்கீடு செய்யும் வாய்ப்புள்ளது. தொகுதிகள் பங்கீட்டில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கட்சிகள் மத்தியில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், தே.மு.தி.க., தலைமையில் புது அணி உருவாகியுள்ளது. இதற்கிடையில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம், மயிலாப்பூர் மாங்கொல்லையில் இன்று நடக்கிறது. அக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தனது பிரசாரத்தை துவக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். கோவை - வேலூரில் மார்க்., கம்யூ., போட்டி: அ.தி.மு.க., தன் கூட்டணிக் கட்சிகளை கழற்றிவிட்டதையடுத்து, தே.மு.தி.க.,வும், மார்க்சிஸ்ட் கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேச்சு நடத்தின. இதில், இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மார்க்., கம்யூ., செயலர் ராமகிருஷ்ணனும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் மார்க்., கம்யூ., போட்டியிடும் தொகுதிகளை ராமகிருஷ்ணன் அறிவித்தார். இதன்படி கோவை, வேலூர் மாநகராட்சிகள் மார்க்., கம்யூ., போட்டியிடுகிறது. மாவட்ட அளவில் உள்ள வார்டுகளுக்கு இரு கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் ‌கலந்து பேசி முடிவு எடுத்துக்கொள்வர் என்றார். சுமுக உறவு இது என்கிறார் விஜயகாந்த்: விஜயகாந்தும், ஜி.ராமகிருஷ்ணனும் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேசுகையில்: விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: 3 வது அணி அமைந்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி இதை மட்டும் மக்களுக்கு பத்திரிகையாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் வேறு எதையும் பற்றி நிருபர்கள் கேட்க வேண்டாம். மற்றதை அப்புறம் வைத்துக்கொள்வோம் . இப்போதைக்கு சுமுகமான உறவு ஏற்பட்டிருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment

BIG ROCK

Related Posts Plugin for WordPress, Blogger...